கர்ப்பிணி ராணுவ வீராங்கனைகளுக்கான புதிய சீருடை: ஜேர்மனி திட்டம்

Report Print Balamanuvelan in ஜேர்மனி
100Shares

பெண் ராணுவ வீரர்கள் கர்ப்பமானால் அவர்கள் என்ன சீருடை உடுத்துவார்கள் என்று யாராவது சிந்தித்ததுண்டா? ஜேர்மன் ராணுவம் சிந்தித்திருக்கிறது.

கடந்த ஆண்டு ஜேர்மனி ராணுவம் கர்ப்பிணி ராணுவ வீரர்களுக்கான சீருடைகளைத் தேர்வு செய்வதற்காக பல பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டது.

இந்த சோதனையில் 80 தன்னார்வலர்கள் கலந்து கொண்டு கர்ப்பிணி ராணுவ வீரர்களுக்கான சீருடைகள், ராணுவ நடவடிக்கைகளின்போது அவர்கள் அணிவதற்கேற்ற உள்ளாடைகள் ஆகியவற்றை அணிந்து பரிசோதனை மேற்கொண்டதாக ஜேர்மனியின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவிக்கிறது.

இதையடுத்து 650,000 யூரோக்கள் மதிப்பிலான 500 ஜோடி சீருடைகளை வாங்க முடிவு செய்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

ஜேர்மனி பெண் ராணுவ வீரர்களில் 2 சதவிகிதம்பேர் கர்ப்பமாக உள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவிக்கிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்