பெற்ற பிள்ளைகளை 14 ஆண்டுகளாக உறைய வைத்த கொடூர தாய்

Report Print Kabilan in ஜேர்மனி
486Shares

ஜேர்மனியில் பெண்ணொருவருக்கு தாம் பெற்ற பிள்ளைகளை, 14 மற்றும் 10 ஆண்டுகள் Freezer-யில் வைத்த குற்றத்திற்காக 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியின் Benndorf நகரைச் சேர்ந்தவர் Steffi S(46). இவரது கணவர் அளித்த புகாரின் பேரில் கடந்த ஜனவரி மாதம், வீட்டில் உள்ள Freezer-யில் இருந்து இரண்டு குழந்தைகளின் உடல்கள் உறைந்த நிலையில் மீட்கப்பட்டன.

அதன் பின்னர் நடந்த விசாரணையில் திடுக்கிடும் உண்மை தெரிய வந்தது. Steffi S கடந்த 2004ஆம் ஆண்டு குளியலறையில் பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்.

இந்த பிரசவத்தை மறைத்த அவர், அந்த குழந்தையை Freezer-யில் மறைத்து வைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து, நான்கு ஆண்டுகள் கழித்து ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்த Steffi S, அதனையும் Freezer-யில் வைத்துள்ளார்.

இவ்வாறாக சுமார் 14 மற்றும் 10 ஆண்டுகள் அந்த குழந்தைகள் Freezer-யில் இருந்துள்ளன என்பது தெரிய வந்துள்ளது. மேலும், அந்த குழந்தைகள் நல்ல ஆரோக்கியத்துடன் தான் பிறந்ததாக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, தனது குற்றத்தை ஒப்புக் கொண்ட Steffi S, தான் செய்தது மோசமான குற்றம் என்றும், அதற்காக தனக்கு தண்டனை கிடைத்தாக வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்நிலையில், Steffi Sக்கு குழந்தைகளை கொலை செய்த குற்றத்திற்காக 9 ஆண்டுகள் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

AP

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்