2 வயது மகளின் கழுத்தை அறுத்து கொலை செய்த கொடூர தந்தை

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஜேர்மனியில் 2 வயது மகளின் கழுத்தை அறுத்து கொலை செய்த புகலிட கோரிக்கையாளரை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Hamburg நகரில் வசித்து வந்த Sohail A. என்பவர் கடந்த 2011 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து தனது மனைவி மற்றும் குழந்தைகளோடு வசித்து வந்துள்ளார். புகலிடம் கோரி இவர் சமர்ப்பித்த விண்ணப்பங்களை கடந்த 6 ஆண்டுகளாக ஜேர்மன் அரசாங்கம் நிராகரித்துள்ளது.

தனது குழந்தைகள் மற்றும் மனைவியை உடல்ரீதியாக அவ்வப்போது அடித்து சித்ரவதை செய்யும் இவர், சம்பவம் நடைபெற்ற அன்று கோபத்தில் தனது 2 வயது மகள் ஆயிஷாவை கத்தியால் கழுத்தறுத்து கொன்றுள்ளார்.

வீட்டிற்கு திரும்பிய மனைவி, தனது மகள் ரத்தவெள்ளத்தில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து பொலிசில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, Hamburg சிறையில் அடைக்கப்பட்ட இவர் மீது கொலைவழக்கு பதிவுசெய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையில், முக்கிய சாட்சி அவரது மனைவிதான். மேலும் தன்னை குறித்து பொலிசில் புகார் அளித்த மனைவி மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

வழக்கு விசாரணையில், தனது கணவருக்கு எதிரான சாட்சியங்களை நீதிபதியிடம் மனைவி தெரிவித்துள்ளார். இதனை அடிப்படையாக வைத்து இவருக்கு தண்டனை வழங்கப்படவிருக்கிறது.

ஆனால், எல்லா தவறும் என் மீது விழுந்துவிட்டன, நான் எனது மகளை மிகவும் நேசிக்கிறேன் என வழக்கறிஞரிடம் Sohail A தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்