அகதிகளுக்கு மீண்டும் உணவு வழங்க முன்வந்துள்ள ஜேர்மனி உணவு வங்கி

Report Print Balamanuvelan in ஜேர்மனி
224Shares

வெளி நாட்டவர்களுக்கு உணவு வழங்க மறுத்ததால் கடும் விமர்சனங்களுக்குள்ளாகிய ஜேர்மனியின் Essen நகரிலுள்ள உணவு வங்கி ஒன்று கடும் எதிர்ப்புகள் எழுந்ததையடுத்து மீண்டும் அகதிகளுக்கு உணவு வழங்க முன்வந்துள்ளது.

வெளி நாட்டவர்களுக்கு உணவு வழங்க விதித்திருந்த தடையை அது நேற்று விலக்கிக் கொண்டது.

ஜனவரி மாதம் அந்த உணவு வங்கி, ஜேர்மானிய முதியவர்கள் பலர் உணவு கிடைக்காமல் கஷ்டப்படுவதாகவும், உணவு பெறுபவர்களில் 75 சதவிகிதத்தினர் வெளிநாட்டினர் என்றும் அதனால் இனி வெளி நாட்டவர்களுக்கு உணவு வழங்கப் போவதில்லை என்றும் முடிவு செய்தது.

இது தேசிய அளவில் பிரச்சினைகளைக் கிளப்பியதை பத்திரிகைகள் பல வெளியிட்டதால் அந்த உணவு வங்கி அதிர்ந்துபோனது.

அரசியல் புள்ளிகள் உட்பட பலர் உணவு வழங்குதல் தேவையின் அடிப்படையில் செய்யப்படவேண்டுமே ஒழிய உணவு பெறுபவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதன் அடிப்படையில் செய்யப்படக் கூடாது என்பதை சுட்டிக் காட்டினர்.

சேன்ஸலர் Angela Merkel உட்பட பலர் இதற்கெதிராக குரல் எழுப்பினர்.

இந்நிலையில் தனது முடிவை மாற்றிக் கொண்ட உணவு வங்கி இனி உணவு பெறுபவர்கள் எந்த நாட்டினர் என்று பார்க்காமல், ஒரு பெற்றோரை மட்டுமே கொண்ட குடும்பங்கள், சிறு குழந்தைகள் உடைய குடும்பங்கள் மற்றும் வயதானவர்கள் மீது கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்