ஜேர்மனியில் அதிகரிக்கும் பழமைவாதிகளின் எண்ணிக்கை: வெளியான தகவல்

Report Print Arbin Arbin in ஜேர்மனி
84Shares

ஜேர்மனியில் சலாபிஸ்டுகள் எனப்படும் தீவிர பழமைவாதிகளின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் இருமடங்காக அதிகரித்துள்ளதாக உள்விவகாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஜேர்மனி குடிமக்களில் சலாபிஸ்டுகள் எனப்படும் தீவிர பழமைவாதிகளாக இனம்காணப்படுபவர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக உள்விவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போதைய கணக்கெடுப்பின்படி சுமார் 11,000 ஜேர்மன் குடிமக்கள் தீவிர பழமைவாதிகளாக கருதப்படுகின்றனர்.

5 ஆண்டுகளுக்கு முன்னர் ஜேர்மன் உளவுத்துறையானது அரசுக்கு சமர்ப்பித்த அறிக்கையில் சலாபிஸ்டுகளின் எண்ணிக்கை வெறும் 5,500 என இருப்பதாக குறிப்பிட்டிருந்தது.

Salafism என்பது இஸ்லாமிய மத கோட்பாட்டின்படி பழமைவாதமாகும். ஜேர்மன் பாதுகாப்புத்துறை நிர்வாகிகளின் பார்வையில் Salafism என்பது இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு இட்டுச்செல்லும் முதற்படி என கருதப்படுகிறது.

ஜேர்மன் மக்கள்தொகையில் சுமார் 5 மில்லியன் பேர் இஸ்லாமிய மத நம்பிக்கையாளர்கள். இதன் அடிப்படையில் சுமார் 22 விழுக்காடு இஸ்லாமியர்கள் ஜேர்மனியில் Salafism பின்பற்றுவதாக தெரிய வந்துள்ளது.

பெர்லின், ஹாம்பர்க் மற்றும் கிழக்கு மாகாணங்களில் தீவிர பழமைவாதத்தை கடைபிடிக்கும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்