ஜேர்மனியைத் தாக்கவிருக்கும் புயல்: வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை

Report Print Balamanuvelan in ஜேர்மனி
313Shares

இன்று மாலை ஜேர்மனியின் கிழக்கு பகுதிகளை புயல் தாக்கலாம் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

என்றாலும் மழைக்கு பிறகு வார இறுதியில் வானம் தெளிவடையும் என்றும் வெப்ப நிலை உயரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கிலிருந்து ஜேர்மனியை நோக்கி வரும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று இரவு ஆலங்கட்டி மழை, பலத்த காற்று மற்றும் கனத்த மழை ஆகியவற்றைக் கொண்டு வர உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமீப நாட்களாக மிதமான வெப்ப நிலை நிலவிய சூழலில், காற்றழுத்தத் தாழ்வு நிலையின் காரணமாக ஜேர்மனியைக் குளிர் தாக்க இருக்கிறது.

இன்று நாட்டின் மேற்கு பகுதிகளில் மழை வரலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் கிழக்கு பகுதிகளை புயல் தாக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் புயல் விலகி நாடு முழுவதும் வெப்ப நிலை 10 முதல் 15 டிகிரியாக உயரும்.

வார இறுதியில் வெப்ப நிலை 25 டிகிரி வரை செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்