ஹாம்பர்க்கில் சுற்றுலாப் பேருந்து விபத்து: நான்கு பேர் படுகாயம்

Report Print Gokulan Gokulan in ஜேர்மனி

ஈஸ்டர்-திங்கன்று பிற்பகல் ஹாம்பர்க்கில் நடந்த கார் மற்றும் இரட்டை அடுக்குப் பேருந்து நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் நான்கு பேர் படுகாயம் அடைந்ததுடன் ஏழு பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து தீயணைப்புத் துறை வெளியிட்ட செய்தி என்னவெனில் அதிவேகமாக வந்த காரும் பேருந்தும் நேருக்கு நேராக மோதியதில் பயணிகள் அவரவர் வாகனங்களில் சிக்கிக் கொண்டனர்.

இதில் மோசமாக உருக்குலைந்த காரிலிருந்த நான்கு நபர்களை அத்தனை சீக்கிரமாக அதிலிருந்து வெளியேற்ற முடியவில்லை, ஒரு ஹைட்ராலிக் வெட்டு இயந்திரத்தின் மூலம் காரை வெட்டித்தான் அவர்களை மீட்க முடிந்தது. இந்த விபத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

தகவலறிந்த உடன் ஹம்பேர்க் தீயணைப்பு துறையினர், ஜேர்மன் செஞ்சிலுவைச் சங்கம் பண்டேச்வர் ரெஸ்க்யூ சர்விஸ் ஆகியவற்றில் இருந்து பலர் அனுப்பப்பட்டனர். இதில் காரில் இருந்து படுகாயங்களுடன் மீட்கபட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை நடைபெற்றது.

சுற்றுலாப் பேருந்திலும் ஏழு பேருக்கு காயத்திற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் ஒருவர் கர்ப்பிணி அவருக்கு அதிக பாதிப்பில்லை என்ற போதும் அதிக கவனத்துடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனையின் அவசர அறைக்கு அனுப்பப்படுவதற்கு முன்னர், மீட்கப்பட்ட நான்கு பேருக்கும் அவசர சிகிச்சை ஊழியர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்போது உள்ளூர் மருத்துவர்கள் மூலம் சிகிச்சை பெறுகின்றனர்.

விபத்து நடந்த உடன் இதனை முதலில் அணுகியவர்கள் உடனடியாக 11 பேருக்குத் தேவையான உதவிகள் செய்தது இதுபோன்ற சம்பவங்களின் போது செயல்படும் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக இருக்கிறது என்று தீயணைப்புத் துறை பாராட்டியுள்ளது.

முன்னதாக இந்த விபத்தின் மீட்புப் பணியில் ஆறு ஆம்புலன்ஸ்கள் ஒரு தீயணைப்புத் துறையின் கிரேன் மற்றும் ஒரு ஹெலிகாப்டடர் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்