ஜேர்மன் சான்சலரை நிம்மதி பெருமூச்சு விடவைத்த முடிவு

Report Print Balamanuvelan in ஜேர்மனி

பிரதான கூட்டணிக்கட்சியான Social Democratic Partyக்குள் ஏற்பட்ட எதிர்ப்புகள் காரணமாக பெரும்பான்மை இழக்கும் சூழ்நிலை ஏற்படலாம் என்ற அச்சத்திலிருந்த ஜேர்மன் சான்சலர் Angela Merkel நிம்மதி பெருமூச்சு விடும் வகையில் அவருக்கு ஆதரவு அளிப்பதென Social Democratic Party முடிவு செய்துள்ளது.

தொடர்ந்து 12 ஆண்டுகளாக பதவியிலிருக்கும் Angela Merkelஇன் கட்சியுடன் இனி கூட்டணி வைக்கக்கூடாது என்பதற்காக Social Democratic Partyயின் இளம் அரசியல்வாதியான Kevin Kuehnert(28), NoGroKo என்னும் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

இதனால் ஜேர்மனியில் அரசியல் சூழலே தலைகீழாக மாறலாம் என்று செய்திகள் வெளியாகின.

இதையடுத்து ஞாயிறன்று Social Democratic Partyயில் Angela Merkelஉடனான கூட்டணியைத் தொடர்வதா வேண்டாமா என்பதற்காக ஒரு வாக்கெடுப்பு நடைபெற்றது.

கட்சியில் பெரும்பாலானோர் Angela Merkelஉடனான கூட்டணியைத் தொடரலாம் என்று வாக்களித்துள்ளதையடுத்து அவர் புதிய அரசு அமைப்பதற்கு இருந்த கடைசி தடையும் நீங்கியுள்ளது. இதனால் அவர் நான்காவது முறையாக ஜேர்மனியின் சான்சலர் பதவியில் தொடரலாம்.

தனக்கு மீண்டும் ஆதரவு தெரிவித்ததற்காக Social Democratic Partyக்கு தனது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்ட Angela Merkel, நாட்டின் நலனுக்காக நாம் இணைந்து செயல்படுவோம் என்று தெரிவித்துள்ளார்.

ஜேர்மன் நாடாளுமன்றம் அடுத்த வாரத்தில் கூடி Angela Merkelஐ மீண்டும் சான்சலராக தேர்ந்தெடுக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்