அசுர வளர்ச்சியில் ஜேர்மன் பொருளாதாரம்

Report Print Arbin Arbin in ஜேர்மனி
380Shares
380Shares
ibctamil.com

ஐரோப்பிய நாடுகளில் மிகவும் சக்தி வாய்ந்த பொருளாதாரத்தைக் கொண்ட ஜேர்மனி இந்த ஆண்டும் அதன் சாதனையை தொடரும் என ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

2017 ஆம் ஆண்டு ஆண்டு தேர்தல் உள்ளிட்ட சில அரசியல் காரணங்களால் ஜேர்மன் பொருளாதாரம் சுணக்கத்தை சந்தித்தாலும் சீரான வேகத்தில் குதித்து வருவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி கடந்த ஓராண்டில் மட்டும் 2.2 அதிக வளர்ச்சியை ஜேர்மன் பொருளாதாரம் பதிவு செய்துள்ளது.

இது கடந்த 2011 ஆம் ஆண்டு பதிவான வளர்ச்சியைவிடவும் அதிகம் என குறிப்பிட்டுள்ளனர்.

ஆண்டின் இறுதி 3 மாதங்களில் மட்டும் ஏற்றுமதியில் ஜேர்மனி சாதனை படைத்துள்ளதாக கூறும் ஆய்வாளர்கள் முதலீடும் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் எட்டிய வளர்ச்சியை இந்த ஆண்டும் ஜேர்மனி தக்கவைக்கும் என கருத்து தெரிவித்துள்ள ஆய்வாளர்கள்,

இது அடுத்த சில ஆண்டுகளிலும் நீடிக்கும் எனவும் பதிவு செய்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்