இஸ்ரேலிய கொடிகளை எரித்து ஆர்ப்பாட்டம்: ஜேர்மனிய சட்டம் என்ன சொல்கிறது

Report Print Athavan in ஜேர்மனி

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேத்தை அமெரிக்கா அங்கீகரித்த நாளில் இருந்தே உலகெங்கிலும் பல கண்டன போராட்டங்கள் நடைபெற்றன.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஜேர்மன் தலைநகர் பெர்லினில் யூதர்களுக்கு எதிராக கலவரங்களை தூண்டும் வகையில் இஸ்ரேலிய கொடி மற்றும் சின்னங்களை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதற்கு ஜேர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்கல் உள்ளிட்ட பல முன்னணி அரசியல் தலைவர்களும் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

ஜேர்மனியில் வெளிநாட்டின் கொடிகளை எரிக்கும் நடவடிக்கைகள் உண்மையில் சட்டவிரோதமா? பெர்லினில் இஸ்ரேலிய கொடிகள் எரிக்கப்பட்டது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமா ? என்பது தொடர்பான கேள்விகளுக்கு நீதித்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஒருவர் பின்வருமாறு பதில் அளித்தார்.

ஜேர்மனியின் குற்றவியல் சட்டம் 104ன் படி ”வெளிநாட்டு கொடிகளுக்கு சேதம் விளைவித்தல், அப்புறப்படுத்துதல் மற்றும் எரித்தல் போன்ற குற்றங்களுக்கு 2 வருட சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்”என குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறினார்.

ஆனால் பெர்லின் காவல்துறை அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,“ இஸ்ரேலிய கொடி எரிக்கப்பட்டதற்கு குற்றவியல் சட்டம் 104 பொருந்தாது.

எந்த நாட்டு கொடியை எரிப்பதும் இங்கு குற்றமில்லை, அது அமெரிக்க கொடியாகவே இருந்தாலும் சரி.

ஆனால் பிற நாட்டு தூதரகங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் உள்ள பிற நாட்டு கொடிகளை சேதப்படுத்தினால் மட்டுமே குற்றவியல் சட்டம் 104 பொருந்தும். பெர்லினில் தன்னிச்சையாக இஸ்ரேல் கொடி எரிக்கப்பட்டது குற்றமில்லை என தெரிவித்துள்ளார்.

ஆனால் இன கலவரத்தை தூண்டும் வகையில் பேசுவதும், குழந்தைகளை கொல்லும் அரசு என முழக்கமிட்டு யூதர்களை தாக்க சொல்வதும் ஜேர்மனிய குற்றவியல் சட்டம் 130ஐ மீறும் செயல் ஆகும் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்