காருக்குள் காதல் செய்த இளம் ஜோடி: ஆற்றுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளான கார்

Report Print Arbin Arbin in ஜேர்மனி
642Shares
642Shares
lankasrimarket.com

ஜேர்மனியின் ஹாம்பர்க் பகுதியில் காருக்குள் இளம் ஜோடி ஒன்று காதல் செய்த நிலையில் handbrake-ஐ தட்டிவிட்டதால் கார் ஆற்றுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹாம்பர்க் நகரில் Elbe ஆற்றங்கரையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

21 மற்றும் 23 வயது பிராயம் கொண்ட இளம் காதலர்கள் தனியாக நேரத்தை செலவிட எண்ணி Elbe ஆற்றங்கரையில் தங்கள் வாகனத்தை நிறுத்தியுள்ளனர்.

நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் காதலர்கள் இருவரும் ஆரத்தழுவி காதல் செய்வதை பார்வையாளர்கள் பலர் பார்த்ததாகவும் உள்ளூர் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இதனிடையே காதலர்களின் கவனக்குறைவால் handbrake தட்டிவிட்டதில் வாகனம் பின்னோக்கி வேகமாக நகர்ந்துள்ளது.

இருப்பினும் இளைஞர்களில் ஒருவரும் காரை கட்டுப்படுத்தவோ உதவி கேட்டு கூக்குரல் இடவோ முயற்சி செய்யவில்லை.

பின்னோக்கி வேகமாக சென்ற கார் Elbe ஆற்றுக்குள் இறங்கி மூழ்கியது. இதை கவனித்த பார்வையாளர்கள் பதறியடித்து மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு குழுவினர் படகுகள் மற்றும் நீச்சல் வீரர்களுடன் களத்தில் குதித்தனர்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக காதலர்கள் இருவரும் வாகனத்தில் இருந்து வெளியேறி நீந்தி கரையேறியுள்ளனர்.

இதனையடுத்து அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் காரை மீட்பு குழுவினர் ஒன்றிணைந்து கரைக்கு இழுத்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்