கொதிக்கும் நீருக்குள் இளம்பெண்ணை தூக்கிப்போட்ட சூனியக்காரிகள்

Report Print Balamanuvelan in ஜேர்மனி
518Shares
518Shares
lankasrimarket.com

ஜேர்மனியில் நடந்த carnival ஒன்றின்போது சூனியக்காரி வேடமிட்ட இருவர் ஒரு இளம்பெண்ணை கொதிக்கும் நீர் நிறைந்த அண்டாவிற்குள் தூக்கிப்போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியில் நடந்த carnival ஒன்றில் பலர் வெவ்வேறு வேடமிட்டு ஊர்வலமாக வந்தனர், அதில் ஒரு வாகனத்தில் இரு பெண்கள் சூனியக்காரிகள்போல வேடமிட்டு வந்தனர்.

வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சிலர் தங்கள் தோழியைத் தூக்கி சூனியக்காரிகளிடம் கொடுக்க அந்த சூனியக்காரிகளில் ஒருத்தி அண்டாவைத் திறக்க இன்னொருத்தி அவளை அண்டாவுக்குள் இறக்கினாள்.

அண்டாவுக்குள் இறங்கியபிறகுதான் அதற்குள் கொதிக்கும் தண்ணீர் இருப்பது தெரியவந்தது.

எரிச்சல் தாங்காமல் பெண் அலற சூனியக்காரிகள் ஓடிவிட்டனர், குறித்த பெண்ணின் கால்கள் வெந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயங்கள் ஆறுவதற்காக குறைந்தபட்சம் ஒரு வாரமாவது மருத்துமனையில் சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சூனியக்காரிகளை பொலிசார் தேடிவரும் நிலையில், இளம்பெண்ணின் நண்பர்கள் விளையாட்டாக நினைத்துத்தான் அவளை சூனியக்காரிகளிடம் ஒப்படைத்ததாகத் தெரியவந்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்