ஜேர்மனியில் கருப்பின மக்கள் நடத்தப்படும் விதம் குறித்து குற்றச்சாட்டு

Report Print Balamanuvelan in ஜேர்மனி
298Shares
298Shares
lankasrimarket.com

ஜேர்மனியிலும் அமெரிக்கா உட்பட மேலும் சில நாடுகளிலும் ”Black History Month” ஆக பிப்ரவரி மாதம் கொண்டாடப்படும் நிலையில், கருப்பினப் பெண்ணாகிய Sandhya Kambhampati ஜேர்மனியில் தான் நடத்தப்பட்ட விதத்தை நினைவு கூறுகிறார்.

2016 முதல் பெர்லினில் வாழ்ந்துவரும் அமெரிக்க பத்திரிகையாளரான Sandhya Kambhampati, ஜேர்மனிக்கு குடிவந்த 9 மாதங்களுக்குள்ளேயே 23 முறை பொலிசார் தன்னைத் தடுத்து நிறுத்தி விசாரணை செய்ததை நினைவுகூறுகிறார்.

இனத்தின் அடிப்படையில் சந்தேகத்திற்குரிய குற்றவாளியைப்போல் நடத்தப்பட்ட அனுபங்களைப் பகிர்ந்துகொள்ளும்படி, தனது சிறப்பு செய்தி ஒன்றிற்காக அவர் மக்களைக் கேட்டுக்கொள்ள ஏராளமான வெறுப்புச் செய்திகள் அவருக்கு வரத்தொடங்கின.

700 பேர் அவருடன் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். அதில் 400 பேரின் அனுபவங்கள் தன்னுடைய அனுபவத்தைப்போலவே இருந்ததை அவர் கவனித்தார்.

பெரும்பாலானோர் கருப்பின மக்கள் பேசுவதைக் கேட்டு அவர்களது ஜேர்மன் உச்சரிப்பு நன்றாக இருப்பதாகக் கூறுகிறார்கள், அல்லது நீ எந்த நாட்டைச் சேர்ந்தவன் அல்லது சேர்ந்தவள் என்று கேட்கிறார்கள். அங்கிருந்துதான் இனவாத விசாரணை தொடங்குகிறது.

பல கருப்பின மக்கள் பொலிசாரிடம் இனவாத விசாரணை குறித்துக் கூறும்போது பொலிசாருக்கு கோபம் வருகிறது.

தாங்கள் தங்கள் பணியையே செய்வதாகவும் மக்கள் தவறாகப் புரித்து கொள்வதாகவும் கூறும் அவர்களுக்கு இனவாத நடத்தைகள் வேண்டுமென்றோ தெரியாமலோகூட வெளிப்படுத்தப்படலாம் என்பதை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது என்கிறார் Amnesty Internationalயில் பணிபுரியும் மனித வள நிபுணரான Maria Scharlau.

இதற்கிடையில் பொலிசார் மற்றும் அதிகாரிகளால் கருப்பாக இருப்பதற்காக தவறாக விசாரிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நீதிபதிகள் தீர்ப்பு வழங்கும் சம்பவங்களும் நடைபெற்றுள்ளன.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்