ஜேர்மனியில் இருந்து அணு ஆயுத திட்டங்களை தீட்டும் வடகொரியா: அதிர்ச்சி தகவல்

Report Print Athavan in ஜேர்மனி
315Shares
315Shares
lankasrimarket.com

வட கொரியாவின் அணு சக்தி மற்றும் ஆயுத திட்டங்களுக்கு தேவையான பொருட்கள் பெர்லினில் உள்ள வடகொரிய தூதரகம் மூலமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜேர்மனியின் உள்நாட்டு புலனாய்வு அமைப்பின் தலைவர் கூறியுள்ளார்.

"வட கொரிய தூதரகத்திலிருந்து பல அணுசக்தி கொள்முதல் தொடர்பான நடவடிக்கைகள் நடைபெற்றுள்ளன என்பதை நாங்கள் கவனித்தோம்" என்று Bundesamt für Verfassungsschutz (BfV) தலைவரான ஹான்ஸ்-ஜார்ஜ் மசென் கூறினார்.

"எங்கள் விசாரணையின் படி, அவர்கள் ஏவுகணைத் திட்டத்திற்காகவும், அணுசக்தி திட்டத்திற்கு அணுக்கரு பெறுவது தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றனர் ," என்று மசென் திங்களன்று ARD எனும் ஜேர்மனிய தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்தார்.

2014 ஆம் ஆண்டில், வட கொரிய தூதர் இரசாயன ஆயுதங்களை தயாரிக்கும் உபகரணங்களைப் பயன்படுத்தும் திட்டங்கள் குறித்து பல்வேறு கொள்முதல் தொடர்புகளை மேற்கொண்டதும் தற்போது தெரியவந்துள்ளது.

வட கொரியா சிரியா மற்றும் மியன்மார் நாடுகளுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்தது என சமீபத்தில் ஐ.நா. அறிக்கை தெரிவித்த பரபரப்பு அடங்குவதற்குள் ஜேர்மனியில் இருந்து அணுசக்தி திட்டங்களை வடகொரியா தீட்டுவது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியின் உள்நாட்டு புலனாய்வு நிறுவனம், 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் தொழில்நுட்ப கொள்முதல் தொடர்பான பிறநாட்டு விவகாரங்களை துப்பறியும் நடவடிக்கைகளை தொடங்கியது என்பது குறிப்பிடதக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்