ஜேர்மனியில் ராக்கெட் வேகத்தில் எகிறும் துப்பாக்கி விற்பனை: வெளியான பகீர் காரணம்

Report Print Arbin Arbin in ஜேர்மனி
384Shares
384Shares
lankasrimarket.com

ஜேர்மனியில் பயங்கரவாத அச்சுறுத்தல் மற்றும் அகதிகள் விவகாரம் தொடர்பில் வரலாறு காணாத வகையில் துப்பாக்கி விற்பனை அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஜேர்மனியில் தொடர் பயங்கரவாத அச்சுறுத்தல்களால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மட்டுமின்றி அகதிகள் வரவு அதிகரித்து, அவர்களால் குற்ற எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது ஜேர்மன் குடிமக்களை பாதுகாப்பற்ற் சூழலில் தள்ளியுள்ளது.

இதனால் தற்காப்புக்காக ஜேர்மானியர்கள் துப்பாக்கி வைத்திருக்கும் நிலைக்கு வந்துள்ளனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜேர்மனியில் துப்பாக்கி வைத்திருக்கும் உரிமை பெற்றவர்களின் எண்ணிக்கை 300,949 என இருந்தது.

இது கடந்த ஆண்டு இறுதியில் 557,560 என்ற எண்ணிக்கையாக உயர்ந்துள்ளது. மட்டுமின்றி கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 85 விழுக்காடு உயர்ந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேலும் பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு துப்பாக்கிகள் இல்லை எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ராக்கெட் வேகத்தின் துப்பாக்கிகளின் தேவை அதிகரித்திருப்பதன் உண்மையான காரணம் நிபுணர்களால் கணிக்க முடியவில்லை என்றாலும்,

சான்சலர் மெர்க்கலின் கண்மூடித்தனமான முடிவுகளே காரணம் என ஒருசாரார் சுட்டுகின்றனர்.

ஜேர்மனியில் அகதிகள் வருகை அதிகரித்ததில் இருந்தே குற்றச்செயல்களின் எண்ணிக்கை 52.7 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மட்டுமின்றி ஐரோப்பாவில் அதிகரித்துள்ள பயங்கரவாத அச்சுறுத்தல்கள் பொதுமக்களை தற்காப்புக்காக ஆயுதம் வைத்துக்கொள்ளும் நிலைக்கு கொண்டுவந்து சேர்த்துள்ளது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்