ஜேர்மனியில் ஓடும் ரயிலில் திருடியவரின் படத்தை வெளியிட்ட பொலிஸ்

Report Print Athavan in ஜேர்மனி

ஜெர்மனியில் ஓடும் ரயிலில் பயணியின் பையிலிருந்த பணத்தை மர்ம நபர் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரயிலின் CCTV-இல் பதிவாகிய குற்றவாளியின் படத்தை Munich பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

ஜேர்மனியின்ம் பீர் திருவிழா மிகவும் பிரபலமாகும். இதில் 33 ஆக பணியாற்றிய இளைஞர் தனக்கு வருமானமாக கிடைத்த 6,500 யூரோ பணத்தை தனது பையில் வைத்திருந்தார். அவர் இன்று காலை 9 மணிக்கு Herrsching நோக்கி செல்லும் S8 ரயிலில் சென்ற போது திருட்டு நடைபெற்றுள்ளது.

பணத்தை இழந்த இளைஞர் பொலிசாரிடம் தகவல் தெரிவிக்க அவர்கள் சம்பந்தப்பட்ட ரயில் பெட்டியின் CCTC காட்சிகளை ஆராய்ந்தனர், அதில் தூங்கியநிலையில் பயணம் செய்த இளைஞரின் பையிலிருந்து மர்மநபர் ஒருவர் பணத்தை திருடும் காட்சி பதிவாகியிருந்தது.

உடனே CCTV காட்சியை வெளியிட்ட பொலிசார் குற்றவாளியை பற்றி யாருக்கும் தெரிந்தால் 089/515550-111 எனும் நம்பருக்கு தகவல் தெரிக்குமாறு தொலைபேசி எண் அறிவித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்