கலவர பூமியாக மாறிய விமான நிலையம்: வன்முறையை தடுக்க பொலிசார் முயற்சி

Report Print Santhan in ஜேர்மனி
507Shares

ஜேர்மன் விமான நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சண்டையில் ஈடுபட்டதால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியுள்ளது.

துருக்கி இராணுவம் கடந்த சனிக்கிழமை சிரியாவின் குர்திஷ் படைகள் மீது ஒரு பெரிய தாக்குதலை நடத்தியது.

இந்நிலையில் 180-க்கும் மேற்பட்ட குர்திஷ் இனத்தவர்கள் ஜேர்மனியின் Hannover விமான நிலையத்தில் போராட்டம் நடத்தியுள்ளனர்.

குறிப்பாக அவர்கள் துருக்கி ஏர்லைன்சிற்கு செல்பவர்கள் பரிசோதிக்கப்படும் இடத்தில் நின்று "Fascist Erdogan" என்று முழக்கமிட்ட படி இருந்துள்ளனர்.

அப்போது திடீரென்று இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. இதனால் விமான நிலையம் பார்க்க கலவர பூமி போன்று காட்சியளித்துள்ளது.

இந்த வன்முறையின் போது ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த கொடி கம்புகளை ஆயுதமாக பயன்படுத்தியுள்ளனர்.

இதனால் பொலிசார் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து இதை கட்டுப்படுத்த முயற்சி செய்தனர். ஆனால் தொடர்ந்து சண்டை நடந்ததால், பொலிசார் பெப்பர் ஸ்பீரேயை பயன்படுத்தி கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட போது, துருக்கி பயணிகளுடன் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக இந்த மோதல் ஏற்பட்டிருக்கலாம் என்று பொலிசார் கருதுகின்றனர்.

இருப்பினும் தற்போது இதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், அதன் பின் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்