97 நோயாளிகளை ரசித்து கொடூரமாக கொலை செய்த நர்ஸ்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

Niels Hoegel என்னும் ஆண் நர்ஸ் வடக்கு ஜேர்மனியில் உள்ள மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருந்த இரண்டு நோயாளிகளைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

தொடர்ந்து நடைபெற்று வந்த விசாரணையில் அதே மருத்துவமனையில் மேலும் 62 நோயாளிகளையும் Oldenburg என்னுமிடத்தில் உள்ள மருத்துவமனையில் 35 நோயாளிகளையும் அவர் கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

67 கல்லறைகளிலிருந்து 134 உடல்களைத் தோண்டி எடுத்த பொலிசார் இதுவரை Hoegelஐ 6 முறை விசாரணை செய்துள்ளனர்.

அவர் நூற்றுக்கும் அதிகமான கொலைகளைச் செய்திருக்கலாம் என்று பொலிசார் கருதுகின்றனர்.

இனி பரோலில் வருவதற்கான வாய்ப்பு அவருக்கு இல்லாமல் போகலாம், ஆனால் ஜேர்மனி சட்டத்துறையில் அடுத்தடுத்து தண்டனையை அனுபவிக்கும் முறை இல்லை. அதாவது குற்றவாளி தண்டனையை ஏக காலத்தில்தான் அனுபவிப்பார்.

இதய நோய்க்கான மருந்துகளையும் இன்னும் பல மருந்துகளையும் நோயாளிகளுக்கு கொடுத்து அவர்கள் இறந்தபின் இதய மசாஜ் கொடுத்து அவர்களுக்கு மீண்டும் உயிர் வரச் செய்வதை ஒரு விளையாட்டாகச் செய்து வேடிக்கை பார்க்கும் குணம் கொண்டவன் Niels Hoegel என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...