ஜேர்மனியில் புதிய அகதிகள் நுழையத் தடை

Report Print Kabilan in ஜேர்மனி

ஜேர்மனியின் Cottbus நகரில் உள்ள அகதிகளினால் பொதுமக்களுக்கு இடையூறுகள் ஏற்படுவதால், புதிதாக அகதிகள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Cottbus நகரில், அகதிகளினால் பொதுமக்களுக்கு தொந்தரவுகள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.

இதற்கு உதாரணமாக இந்த வாரத்தின் தொடக்கத்தில், ஜேர்மனிய சிறுவன் ஒருவனை கத்தியைக் கொண்டு தாக்கியதாக, இரண்டு சிரிய அகதி சிறுவர்கள் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் நடைபெற்ற சில நாட்களிலேயே, 14 முதல் 17 வயதுடைய மூன்று சிரியாவைச் சேர்ந்த சிறுவர்கள், ஒரு தம்பதியரை வணிக வீதியில் தாக்கியதாக பொலிசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவங்களை கருத்தில் கொண்டு, நகரின் மையப்பகுதியில் உள்ள சதுக்கத்தில் வீடியோ கமெராக்கள் பொருத்தப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக புதிதாக அகதிகளுக்கு, Cottbus நகரில் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த தடை உத்தரவானது இன்னும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் என்றும் அந்நகர பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஏற்கனவே கடந்த ஆண்டு Salzgitter, Delmenhorst மற்றும் Wilhelmshaven ஆகிய நகரங்களில் இது போன்ற தடை விதிக்கப்பட்டிருந்ததாகவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்