டிராம் வண்டி நிறுத்தத்தில் இளைஞருக்கு கத்திக்குத்து: மர்ம நபர் தப்பியோட்டம்

Report Print Arbin Arbin in ஜேர்மனி

ஜேர்மனியில் டிராம் வண்டி நிறுத்தத்தில் இளைஞரை கத்தியால் குத்திவிட்டு மாயமான நபரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஜேர்மனியின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள Cottbus பகுதியிலேயே குறித்த சம்பவம் நடந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ள உள்ளூர் செய்தி ஊடகம் ஒன்று இளைஞரை கத்தியால் தாக்கியது சிரியா நாட்டு அகதி என குறிப்பிட்டுள்ளது.

உள்ளூர் நேரப்படி மாலை 3 மணி அளவில் Blechen-Carre டிராம் வண்டி நிறுத்தத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.

முன்னதாக இரு இளைஞர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், திடீரென்று அந்த நபர் கத்தியால் தாக்கியதாகவும் தெரியவந்துள்ளது.

காயமடைந்த இளைஞரை மீட்டுள்ள பொதுமக்கள் குறித்த இளைஞருக்கு முதலுதவி அளித்துள்ளனர்.

இதனிடையே தகவலறிந்து வந்த பொலிசார் அவரை அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

சம்பவம் நடந்த பகுதியில் இருந்து மாயமான சிரியா இளைஞனை தேடும் பணியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

மட்டுமின்றி சம்பவத்தின்போது அருகாமையில் இருந்த பொதுமக்களிடமும் பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வணிக வளாகம் ஒன்றில் நடந்த கைகலப்புக்கு பொறுப்பேற்று இளைஞர் ஒருவரை நகரில் இருந்து வெளியேற வற்புறுத்திய சம்பவத்தை அடுத்தே இந்த கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்