ஈரானிய உளவாளிகளைத் தேடிய ஜேர்மன் பொலிசார்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மன் சிறப்பு பொலிசார் ஈரானிய உளவாளிகள் என சந்தேகிக்கப்படும் 10 நபர்களைத் தேடி அடுக்குமாடிக்கட்டிடங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

ஜேர்மன் உளவுத்துறைகளில் ஒன்றினால் இந்த தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டது. ஈரானியர்கள் பொதுவாக இஸ்ரேலியர்கள் அல்லது யூதர்களை உளவு பார்ப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

Berlin, Bavaria, North Rhine-Westphalia மற்றும் Baden Württemberg ஆகிய இடங்களில் ரெய்டுகள் நடந்ததாக ஜேர்மனியின் Focus பத்திரிகை தெரிவிக்கிறது.

1997ஆம் ஆண்டு, பெர்லினில் வழங்கப்பட்ட தீர்ப்பு ஒன்றில் நான்கு ஈரானிய குர்திஷ் அதிருப்தியாளர்கள் கொல்லப்பட்டதில் ஈரான் நாட்டின் முக்கியமான அரசியல்வாதிகளின் பங்கு இருப்பதாகக் கூறப்பட்டது.

1992ஆம் ஆண்டு பெர்லினின் Mykonos ஹோட்டலில் நடைபெற்ற கொலைக்கு ஈரானிய ரகசிய உளவாளிகளே காரணம் என்று ஜேர்மன் பொலிசார் தெரிவித்தனர்.

நடத்தப்பட்ட ரெய்டுகளில் யாரும் கைது செய்யப்படவில்லை.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்