ஜேர்மனியில் விபத்துக்குள்ளான பள்ளிப் பேருந்து: 48 மாணவர்கள் படுகாயம்

Report Print Harishan in ஜேர்மனி

ஜேர்மனியில் பள்ளிப் பேருந்து விபத்துக்குள்ளானதில் 48 மாணவர்கள் படுகாயமடைந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியின் எபெர்பக் பகுதியில் நேற்று(16/1/2017) காலை 7 மணியளவில் 48 நபர்களுடன் பள்ளிப்பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது.

அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, அருகில் இருந்த கட்டிடத்தில் பலமாக மோதி நின்றுள்ளது.

48 நபர்களில் பெரும்பாலும் பள்ளி மாணவர்களே இருந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து உடனடியாக பொலிசார் மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், 3 ஹெலிகாப்டர்கள் மற்றும் 10 அவசர கால ஊர்தியின் உதவியுடன் விபத்தில் சிக்கிய மாணவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் விபத்தில் சிக்கிய மாணவர்களில் 10 பேரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்