ஜேர்மனியில் அமுலுக்கு வந்த புதிய சட்டம்

Report Print Raju Raju in ஜேர்மனி
494Shares
494Shares
ibctamil.com

சர்ச்சைக்குரிய வெறுப்பூட்டும் பதிவுகளை சமூகவலைதளங்களிலிருந்து நீக்காவிட்டால் குறித்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கும் சட்டம் ஜேர்மனியில் அமுலுக்கு வந்துள்ளது.

இது குறித்த சட்ட மசோதா கடந்த யூன் மாதம் நிறைவேற்றப்பட்ட நிலையில் புத்தாண்டு முதல் நாட்டில் சட்டம் அமுலுக்கு வந்துள்ளது.

டுவிட்டர், பேஸ்புக், யூ-டியூப், கூகுள் உள்ளிட்ட அனைத்து சமுக வலைதளங்களும் இந்த சட்டத்தின் கீழ் வரும்.

சட்டவிரோதமான மற்றும் வெறுப்பூட்டும் பதிவுகளை 24 மணிநேரத்துக்குள் நீக்காவிட்டால் $60 மில்லியன் வரை சமுகவலைதள நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க நேரிடும்.

புதிய சட்டத்துக்கு உட்பட்டு கட்டுப்பாடுகளுடன் செயல்படுவோம் என மூன்று சமூகவலைதள நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.

ஆனால் இந்த சட்ட உத்தரவு படி செயல்படுவோமா என்பது குறித்து டுவிட்டர் கடந்த செவ்வாய்கிழமை கருத்து கூற மறுத்து விட்டது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்