ஜேர்மனியில் இளம்பெண் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கின் விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
ஜேர்மனியின் பல்பொருள் அங்காடி ஒன்றில் சில நாட்களுக்கு முன்பாக 15-வயது இளைஞருக்கும் அதே வயதுடைய பெண்ணுக்கும்வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது ஒரு கட்டத்தில் கோபமடைந்த இளைஞர், அப்பெண்ணை கடுமையாக தாக்கியதில் அவர் பலியானார்.
இதுதொடர்பாக அந்த இளைஞரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், அவர் ஆப்கான் நாட்டை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
இருவரும் காதலித்து வந்துள்ளனர், சில தினங்களுக்கு முன்னர் காதலை முறித்துக்கொள்வதாக அப்பெண் கூறிய நிலையில் ஆத்திரத்தில் கொலை செய்திருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் அந்நபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.