40,000 முன் புதைக்கப்பட்ட சிங்க மனிதன்: மர்மத்தின் பின்னணி என்ன?

Report Print Kavitha in ஜேர்மனி

ஜேர்மனியில் 1939ல் குகையைத் தோண்டியபோது மாமூத் யானைத் தந்தத்தின் துண்டுகள் கிடைத்தன.

அவை வரலாற்றுக்கு முந்தைய பழங்கால மனிதர்களால் செதுக்கப்பட்டவை.

பல ஆண்டுகள் கழித்து அவை ஒன்று சேர்க்கப்பட்ட போது அதில் சிங்க மனிதர் உருவம் கிடைத்தது.

நிற்கும் நிலையில் உள்ள அந்தச் சிங்க மனிதரின் உடலின் தோற்றம் மனித உடல் போன்றே இருந்தது.

யாரென்று தெரியாத அந்த சிங்க மனிதர் அதை உருவாக்கியவர்களுக்கு மிகவும் முக்கியமானவர்.

சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட அந்த உருவத்தை செதுக்க 400 மணி நேரம் ஆகியிருக்கும்.

ஆதிமனிதன் தன் குகையில் மூட்டிய தீயின் முன் சொல்லப்பட்ட கதைகளில் இருந்து அது உருவாகி இருக்கலாம்.

ஏற்கனவே இறந்தவர்களுக்கும் இனிமேல் பிறப்பவர்களுக்கும் ஒரு பிணைப்பை அக்கதைகள் உருவாக்கின.

அப்பிணைப்பு ஆதிகால மனிதர்களுக்கு இந்த உலகிற்கு அப்பாற்பட்டு ஓர் இடத்தை உருவாக்கியது.

அந்த சிங்க மனிதர் உருவம் ஏன் சிதைக்கப்பட்டு புதைக்கப்பட்டது என்று இதுவரை யாரும் அறிந்திராத மர்மமாகவே உள்ளது.

- BBC - Tamil

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்