ஜேர்மனியில் இளம்பெண் அடித்துக் கொலை செய்தவர் கைது

Report Print Harishan in ஜேர்மனி

ஜேர்மனியின் பல்பொருள் அங்காடியில் வைத்து இளம்பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஆப்கான் இளைஞர் கைது செய்யப்பட்டார்.

தென்மேற்கு ஜேர்மனியின் Landau பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் 15 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவருக்கும் அதே வயதுடைய இளம்பெண் ஒருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த அந்நபர், இளம் பெண்ணை கடுமையாக தாக்கியுள்ளார், தாக்குதலுக்கு ஆளான அப்பெண் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிசார், அந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் அந்த இளைஞர் ஆப்கான் நாட்டை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அப்பெண்ணின் வழக்கறிஞர், தாக்கிய நபர் ஆப்கான் நாட்டின் அகதியா என்பது குறித்து சரியான தகவல் தெரியவில்லை, ஆனால் அவர் பயங்கரவாத நோக்கத்துடன் தாக்கியதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து எந்த தகவலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்