ஜேர்மனியில் இந்திய விஞ்ஞானி சாதனை

Report Print Santhan in ஜேர்மனி

ஜேர்மனியில் இந்தியர் ஒருவர் உள்ள விஞ்ஞானி குழு, எந்த விதமான மின்தடையும் இல்லாமல் செல்லக்கூடிய எலக்ட்ரான்களை அதிகுளிர் நிலையில் கண்டுபிடித்துள்ளனர்.

தலைநகரான பெர்லினில் புன்னீத் மூர்த்தி என்ற இந்தியர் ஒருவர் உள்ள விஞ்ஞானி குழு மீக்கடத்தி தொடர்பாக ஆராய்ச்சி நடத்தி வந்தது.

அதில் லேசர்கற்றையை பயன்படுத்தி, பல்வேறு நிலைகளில் உள்ள எலக்ட்ரான்களை ஆராய்ச்சி செய்ததில், சாதாரண நிலையில், உள்ள எலக்ட்ரான்கள் அதிகுளிர் நிலையில் இருக்கும் போது, இருபரிமான தளத்தில் எந்தவிதமான தடையும் இல்லாமல் இயங்குவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

லேசர் ஒளிக்கற்றையை பயன்படுத்தி கண்டுபிடிக்கப்பட்ட இந்த எலக்ட்ரான்கள், இயற்பியலைப் பொறுத்தவரையில், ஒரு மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

இந்த விஞ்ஞான குழுவில் இந்தியர் ஒருவரான புன்னீத் மூர்த்தி இடம்பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்