ஒரு நாளைக்கு 20 லிட்டர் தண்ணீர் குடிக்கும் விசித்திர மனிதன்

Report Print Harishan in ஜேர்மனி

ஜேர்மனியில் நபர் ஒருவர் நாள் ஒன்றுக்கு 20 லிட்டர் தண்ணீர் குடித்துவிட்டு இரண்டு மணி நேரம் மட்டுமே தூங்குவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஜேர்மனியில் கட்டிடக் கலை நிபுணராக பணிபுரிந்து வருபவர் மார்க்வுப்பன் கார்ஸ்ட்(36).

மருத்துவர்களின் பரிந்துரைப்படி சராசரி மனிதர்கள் நாள் ஒன்றுக்கு 3 முதல் 5 லிட்டர் தண்ணீர் வரை குடிக்கலாம்.

ஆனால், அரிய வகை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள இவருக்கு அதிக தண்ணீர் தாகம் எடுப்பது வழக்கமாக இருந்து வந்துள்ளது.

இதனால் நாள் ஒன்றுக்கு 20 லிட்டர் தண்ணீர் குடித்து உயிர் வாழ்ந்து வரும் இந்த நபரால் தினமும் 2 மணி நேரம் மட்டுமே தூங்க முடிகிறது.

தண்ணீர் குடித்தவுடன் சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை உள்ளதால் இரண்டு மணி நேர தூக்கத்துடன் தண்ணீர் மட்டுமே குடித்து உயிர் வாழ்ந்து வருகிறார்.

இவ்வாறு அதிக அளவு தண்ணீர் குடித்து வந்தால் நாளடைவில் மூளையில் தண்ணீர் தேங்கி உயிருக்கு ஆபத்தான நிலை கூட ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த அரிய வகை நீரிழிவு நோயில் இருந்து குணமடைவதற்காக இந்த நபர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்