அகதிகளுக்கு வேலை கிடைக்க இதை செய்யுங்கள்: ஜேர்மனி அதிகாரிகள் வலியுறுத்தல்

Report Print Raju Raju in ஜேர்மனி

ஜேர்மனி அரசாங்கமும், தொழில் நிறுவனங்களும் அகதிகளுக்கு வேலைவாய்ப்பு உருவாக அதிகளவில் உதவ வேண்டும் என நாட்டின் அதிகாரிகள் கூறியுள்ளார்.

அகதிகள் ஜேர்மனியில் அதிகளவில் வேலையில்லாமல் இருப்பதை சுட்டிக்காட்டும் போது உள்ளூர் அதிகாரிகள் இதை தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக நாட்டின் நகரங்கள் மற்றும் நகராட்சிகள் சங்கத்தின் தலைவர் கெர்ட் லேண்ட்ஸ்பெர்க் கூறுகையில், இந்தாண்டு நடுவில் மட்டும் வேலையில்லாதவர்களுக்கான சலுகைகளை கிட்டத்தட்ட 600,000 அகதிகள் பெற்றுள்ளார்கள்.

இது கடந்த 2016-ஆம் ஆண்டை விட எண்ணிக்கையில் 250,000 அதிகமாகும். 200,000-க்கும் குறைவான அகதிகளுக்கு மட்டுமே வேலை கிடைத்து அவர்கள் சமூக பாதுகாப்புக்கு பங்களித்துள்ளார்கள்.

தொழிலாளர் சந்தைக்குள் அகதிகளை ஒருங்கிணைக்க இன்னும் நாம் கடுமையான முயற்சி எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

கெர்ட் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள நாட்டின் வெளியுறவு துறை அமைச்சர் சிக்மர் கேப்ரியல், உள்ளூர் அரசாங்கங்கள் அகதிகளை ஒருங்கிணைக்க அதிகளவில் பணத்தை ஒதுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்