ஜேர்மனியர்கள் சுற்றுலா செல்வதற்கு பாதுகாப்பாக கருதும் இடங்கள் மற்றும் பாதுகாப்பற்ற இடங்கள் குறித்து நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் முடிவுகள் வெளியாகியுள்ளது.
ஜேர்மனியின் சந்தை ஆராய்ச்சி நிறுவனமான Gfk இந்த கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது.
அந்த கருத்துக்கணிப்பு முடிவுகளில், ஐரோப்பாவின் Scandinavia மாகாணத்தை மிகவும் பாதுகாப்பானதாக கருதுவதாக 53 சதவிகித மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் 52 சதவிகித மக்கள் இத்தாலியை தெரிவு செய்துள்ளனர்.
உலகின் சிறந்த சுற்றுலா தளங்களான டர்க்கி, ஈஜிப்ட், டுனிசியா போன்ற பகுதிகளை ஆபத்தானதாக கருதுவதாகவே பெரும்பாலானோர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஆய்வு குழுவிற்கு தலைமை தாங்கிய பேராசிரியர் Ulrich Reinhardt கூறுகையில், சுற்றுலா செல்ல தீர்மானிக்கும் மக்களின் எண்ணத்தில் முதலில் தோன்றுவது பாதுகாப்பு குறித்து தான், அதன் விளைவாகவே பெரும்பாலான மக்கள் ஜேர்மன் மொழி பேசும் நாடுகளான சுவிஸ், ஆஸ்ட்ரியா போன்ற பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கின்றனர்.
பெரும்பாலும் கல்வி அறிவிற்கும் அவர்கள் தெரிவு செய்யும் பகுதிகளுக்கும் நேரடி தொடர்புள்ளதை உணர முடிவதாகவும் பேராசிரியர் கூறியுள்ளார்.
மக்களின் மனப்பான்மையை பொருத்தவரை 23 சதவிகிதம் பேர் அமெரிக்காவையும், அவுஸ்திரேலியா மற்றும் கனடா நாடுகளை முறையே 44 மற்றும் 47 சதவிகித மக்கள் தேர்வு செய்துள்ளனர்.
இந்த முடிவுகளில் பெரும்பாலும் ஊடகங்களின் பங்கு இருப்பதாக பேராசிரியர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.