சாலையில் இருந்த கமெராக்களை உடைத்த நபர்: ஜேர்மனியில் சம்பவம்

Report Print Gokulan Gokulan in ஜேர்மனி

சாலையில் காவல்துறை சார்பாக பொருத்தப்பட்டிருந்த 6 வேகத்தடை கமெராக்களை நபர் ஒருவர் டிராக்டரால் உடைத்து நொறுக்கியுள்ளார்.

ஜேர்மனியின் Frankfurt நகரிலிருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள Gernsheim பகுதியின் சாலையில் இருந்த வேகத்தடை கமெராக்களை நபர் ஒருவர் டிராக்டரால் உடைத்துள்ளார்.

63 வயது மதிக்கத்தக்க அந்த நபர் வேண்டுமென்றே கமெராக்களை நொறுக்கியதாகவும், பின்னணி காரணங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சேதப்படுத்தப்பட்டுள்ள கமெராக்களின் மதிப்பு ஆயிரக்கணக்கான யூரோக்களை விஞ்சும் என்பதால் அந்த நபருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

இதற்கு முன்னரே, குறித்த நபரை 6 கி.மீ வேகத்திற்கு மேல் டிராக்டரை இயக்கக்கூடாதென காவல்துறை எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்