ஜேர்மனில் 15 காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொன்ற இளவரசர் ஹரி

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

பிரித்தானிய இளவரசர் ஹரி தனது நண்பர்களுடன் சேர்ந்து Hunting party- இல் கலந்துகொண்டபோது 15 காட்டு பன்றிகளை சுட்டுக்கொன்றுள்ளார்.

இளவரசர் ஹரிக்கும்- நடிகை மெர்க்கலுக்கும் 2018 ஆம் ஆண்டு மே மாதம் திருமணம் நடைபெறவிருக்கிறது.

இருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ள நிலையில், இளவரசர் ஹரி தனது நண்பர்களுடன் இணைந்து ஜேர்மனி சென்றுள்ளார்.

இவருக்கு ஜேர்மன் இளவரசர் Franz Albrecht zu Oettingen-Spielberg அழைப்பு விடுத்திருந்தார். இந்த Hunting party- இல் சுமார் 60 பேர் கலந்துகொண்டனர்.

விலங்குகளை வேட்டையாடுவது என்பது ஹரிக்கு பிடித்த ஒன்று. Brandenburg - இல் உள்ள காட்டில் 15 பன்றிகளை தனது வேட்டை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளார்.

இரண்டு நாட்கள் தனது நண்பர்களுடன் இந்த வேட்டையாடும் நிகழ்ச்சியல் கலந்துகொள்வார் என கூறப்படுகிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்