உலகின் 'NIGHT OUT' செல்ல சிறந்த நகரம் எது தெரியுமா?

Report Print Gokulan Gokulan in ஜேர்மனி
306Shares

“NIGHT OUT” செல்வதற்கு உலகின் சிறந்த நகரமாக ஜேர்மனியின் HAMBURG தெரிவாகியுள்ளது.

இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஊர் சுற்ற வேண்டுமென்றால் பகல் பொழுதை விட இரவு நேரங்களையே விரும்புகின்றனர்.

அப்படி என்ன தான் தனித்துவம் அந்த இரவு நேரங்களுக்கு என ஆராய்ந்தால், பகலை விட இரவு நேரங்கள் அமைதியானதாக இருப்பதால் ஒரு வித தனியுரிமை கிடைத்ததாக உணரலாம் என்றே கூறுகின்றனர்.

மேலும் வாகன நெரிசல் இல்லாமல், பொதுமக்கள் நடமாட்டம் அதிகளவில் இல்லாமல் சுதந்திரமாக சுற்றித்திரியலாம் என துள்ளலுடன் கூறும் அவர்களுக்கு ஜேர்மனியின் HAMBURG ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம்.

அப்படி செல்லும் 'NIGHT OUT'-களுக்கு உலக அளவில் தனிச்சிறப்பு மிக்க பல நகரங்கள் இருந்தாலும் அவற்றில் முதன்மையானதாக HAMBURG கருதப்படுகிறது.

சமீபத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் உலகின் 41 முக்கிய நகரங்களிலிருந்து திட்டத்தட்ட 4000-க்கும் அதிகமானோர் ஒரு சராசரி இரவு பொழுதை கழிப்பதற்காக இங்கு வந்து செல்வது தெரியவந்துள்ளது.

பப், பார் போன்ற இளைஞர்களை பெரிதும் கவரும் இடங்களுக்கும் இந்த நகரத்தில் பஞ்சம் இருப்பதாக தெரியவில்லை.

மேலும் நியுயார்க், பாரிஸ், லண்டன் போன்ற இரவில் சிறப்பாக காட்சியளிக்க கூடிய ஆகச்சிறந்த நகரங்களுக்கு கடும் சவாலாக விளங்கி வருகிறது இந்த HAMBURG நகரம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்