ஹிட்லர் கடைசியாக சாப்பிட்ட உணவு என்ன தெரியுமா? வெளியான தகவல்

Report Print Arbin Arbin in ஜேர்மனி

ஹிட்லரின் ஆஸ்தான சமையல் கலைஞர் தமது உறவினருக்கு எழுதிய கடிதத்தில் இருந்து அவர் கடைசியாக சாப்பிட்ட உணவு என்ன என்பது தற்போது வெளியாகியுள்ளது.

ஹிட்லரின் ஆஸ்தான சமையல் கலைஞராக செயல்பட்ட Constanze Manziarly தமது சகோதரிக்கு எழுதிய கடிதத்தில், சம்பவம் நடந்த அன்று ஹிட்லர் வறுத்த முட்டை,

காளான், பாஸ்தா மற்றும் தக்காளி சட்னி உள்ளிட்ட உணவுகளை உண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

உணவு விடயத்தில் கண்டிப்புடன் இருந்த ஹிட்லர் பெரும்பாலும் இயற்கை உணவு வகைகளியே உண்டு வந்துள்ளார்.

ஹிட்லரின் கடைசி நாட்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வந்த Stefan Dietrich என்பவருக்கு கிடைக்கப்பெற்ற கடிதம் ஒன்றில் இருந்து குறித்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.

குறித்த கடிதமானது ஹிட்லரின் ஆஸ்தான சமையல் கலைஞரான Constanze Manziarly என்பவர் தமது சகோதரிக்கு 1944 ஆம் ஆண்டு காலகட்டத்தில் எழுதியதாகும்.

பெர்லினில் அமைந்துள்ள பதுங்கு குழி ஒன்றில் 1945 ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி ஹிட்லர் தற்கொலை செய்து கொள்ளும் முன்னர் தமக்கு பிரியமான உணவுகளை சமைக்க உத்தரவிட்டுள்ளார்.

உணவு அருந்திய சில மணி நேரங்களில் ஹிட்லர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்கு பின்னர் ஹிட்லரின் பிரத்யேக செயலருடன் Constanze Manziarly குறித்த பதுங்கு குழியில் இருந்து தப்பியதாக குறப்படுகிறது.

ஆனால் ராணுவ வீரர்களால் கைது செய்யப்பட்டு மறைவிடத்திற்கு அவரை கொண்டு செல்லப்பட்டதாகவும், அதன் பின்னர் அவரை வெளியுலகம் கண்டதில்லை எனவும் கூறப்படுகிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்