ஜேர்மனியில் மீண்டும் தேர்தல்?

Report Print Thayalan Thayalan in ஜேர்மனி
ஜேர்மனியில் மீண்டும் தேர்தல்?

ஜேர்மனியில் கூட்டணி அரசாங்கத்தை அமைக்க முன்னெடுக்கப்பட்டுவந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து, புதிதாகத் தேர்தலை நடத்த விரும்புவதாக அதிபர் அங்கேலா மெர்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தபோதும், தனது பதவியை ராஜினாமாச் செய்வதற்கு எந்தக் காரணமும் இல்லையெனவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் ஊடகமொன்றுக்கு நேற்று திங்கட்கிழமை கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, ‘கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளதால், அரசியல் நெருக்கடியில் ஜேர்மனி சிக்கியுள்ளது. ஆகவே, சிறுபான்மை அரசாங்கத்தை தலைமையேற்று நடத்துவதைவிட, புதிய தேர்தல் நடத்தவே விரும்புகின்றேன்’ என்றார்.

ஜேர்மனியில் கூட்டணி அரசாங்கத்தை அமைக்கும் நோக்கில் சி.டி.யூ/சி.எஸ்.யூ மற்றும் கிறீன்ஸ், எப்.டி.பி ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இருப்பினும், இந்தப் பேச்சவார்த்தையிலிருந்து எப்.டி.பி கட்சி விலகியது. இந்தப் பேச்சுவார்த்தையிலிருந்து எப்.டி.பி கட்சி விலகியதால், அதிபர் அங்கேலா மெர்கல் சிறுபான்மைக் கூட்டணி அரசாங்கத்தை அமைக்கவோ, அல்லது புதிய தேர்தல் நடத்த வேண்டியோ ஏற்படும். இதனையடுத்தே, புதிதாக தேர்தல் நடத்துவதற்கு அதிபர் அங்கேலா மெர்கல் விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியில் கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அங்கேலா மெர்கலின் ஜெர்மனிய கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியக் கட்சி போதியளவான பெரும்பான்மையைப் பெறவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்