ஜேர்மனியில் தீவிரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம்? ஆறு பேர் கைது

Report Print Fathima Fathima in ஜேர்மனி

ஜேர்மனியில் கிறிஸ்துமஸ் மார்க்கெட்டில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய ஆறு நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சிரியா, ஆப்கானிஸ்தான் உட்பட பல நாடுகளில் இருந்து அகதிகளாக வெளியேறும் மக்கள் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைகின்றனர்.

ஜேர்மனியில் அதிகளவு அகதிகள் தஞ்சம் புகுவதால், நாட்டில் தீவிரவாத தாக்குதல் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து ஜேர்மனியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, இதுவரையிலும் 10000 பேரின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டுள்ள நிலையில், 1600 பேர் அதிதீவிரவான வன்முறை குற்றங்களில் ஈடுபடலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்று ஜேர்மன் காவல்துறை Kassel, Essen, Hanover , Leipzig போன்ற நகரங்களில் சோதனை நடத்தினர், அப்போது சந்தேகம்படும் வகையில் இருந்த 20 முதல் 28 வயது வரையிலான ஆறு பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சிரியாவை சேர்ந்த இவர்கள் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

ஜேர்மனியில் பொது இடங்களில் கிறிஸ்துமஸ் தினத்தன்று குண்டுவெடிப்பு போன்ற அசம்பாவித சம்பவங்களை நடத்த இந்த கும்பல் திட்டம் தீட்டியிருக்கலாம் என வழக்கறிஞர்கள் அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் Christian Hartwig வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர்கள் இன்னும் முழுவதுமாக திட்டம் தீட்டி முடிக்கவில்லை என விசாரணையில் ஈடுபட்டுவரும் காவல் துறையினர் கூறியதாக Hartwig தெரிவித்துள்ளார்.

இதேபோன் கடந்தாண்டு பெர்லின் கிறிஸ்துமஸ் மார்க்கெட்டில் நடந்த தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்