ஜேர்மனியில் வானில் பறந்த மர்ம பொருள்: கலர் கலராக மாறியதால் ஆச்சரியம்

Report Print Santhan in ஜேர்மனி

ஜேர்மனியில் நள்ளிரவில் வானில் கடந்து சென்ற மர்ம பொருள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஜேர்மனியில் Hoechen நகரித்திலே குறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்நகரத்தில் இரவு நேரத்தில் திடீரென வானில் பிரகாசமான ஒளியுடன் மர்மப்பொருள் ஒன்று கடந்து சென்றது.

இதை வானில் கண்ட பலரும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்தனர். ஒரு சிலர் இது பறக்கும் தட்டாக இறக்கலாம் என்று கூறினர்.

ஆனால் அவை விண்கற்களாக இருக்கலாம் என்று சர்வதேச விண்கற்கள் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விண்கல் தீப்பற்றி எரிந்தபடியே செல்லும் என்றும், தற்போது காணப்பட்ட பொருள் முதலில் வெள்ளை நிறத்திலிருந்து பின்னர் பச்சை நிறமாக மாறி இறுதியில் ஊதா நிறத்தில் ஒளிர்ந்து கொண்டே மறைந்துள்ளது.

எனவே இது குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும் விண்கற்கள் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...