விமான பயண விடயத்தில் சர்ச்சைக்குரிய தீர்ப்பளித்த ஜேர்மனி நீதிமன்றம்

Report Print Raju Raju in ஜேர்மனி

இஸ்ரேல் குடிமகன்கள் குவைத் ஏர்வேஸ் விமானங்களில் பயணிக்க தடை செய்யும் விடயத்தில் முடிவெடுக்க குறித்த விமான நிறுவனத்துக்கு முழு அதிகாரம் உள்ளது என ஜேர்மன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சட்டரீதியான விளைவுகள் இதன்மூலம் ஏற்படும் என்பதாலேயே இப்படி கூறுவதாக நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது.

சமீபத்தில் கூட ஜேர்மனியின் பிராங்பர்ட் நகரிலிருந்து பாங்காக் நகருக்கு செல்லவிருந்த இஸ்ரேல் பயணிகளின் டிக்கெட்களை குவைத் ஏர்வேஸ் நிறுவனம் ரத்துசெய்தது.

பிராங்பர்ட் நீதிமன்றம் கூறுகையில், குவைத் சட்டங்களை, குறித்த ஏர்வேஸ் நிறுவனம் பின்பற்றுகிறது, குவைத் இஸ்ரேல் அரசை அங்கீகரிக்கவில்லை, அதன்படி அந்நாட்டு விமான நிறுவனம் செயல்படுகிறது.

அதே சமயம் ஜேர்மன் சட்டம் இன, மதம் ஆகியவற்றின் அடிப்படையிலான பாகுபாடுகளை கொண்டதே தவிர குடியுரிமை சம்மந்தமான பாகுபாடுகளை கொண்டதல்ல என கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பயணிக்களுக்கான வழக்கறிஞர் நாதன் கெல்பர்ட், இது ஒரு வெட்கக்கேடான தீர்ப்பு என விமர்சித்துள்ளார். தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் எனவும் கூறியுள்ளார்.

ஜேர்மனியில் உள்ள யூதர்களின் மத்திய கவுன்சில் தெரிவிக்கையில், ஆழமான யூத எதிர்ப்பு சட்டங்களின் அடிப்படையில் செயல்படும் ஒரு வெளிநாட்டு நிறுவனம் ஜேர்மனியில் வணிகம் செய்ய அனுமதிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளது.

பிராங்பேர்ட் மேயர் உவி பெக்கரும் நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...