பிரபல நடிகரின் படத்தை முதுகில் பச்சை குத்திய ஜேர்மன் ரசிகை

Report Print Kabilan in ஜேர்மனி

ஜேர்மனியைச் சேர்ந்த பெண் ரசிகை ஒருவர் தனது முதுகில் பிரபாஸின் படத்தினை பச்சைக் குத்தியுள்ளார்.

ராஜமவுலி இயக்கத்தில் பாகுபலி எனும் திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியானது. இந்த படம் உலகம் முழுவதும் பெரும் வெற்றி பெற்றதுடன், வசூல் சாதனையையும் படைத்தது.

பாகுபலியாக நடித்த பிரபாஸ் இந்த படத்தின் மூலமாக உலகம் முழுவதும் பிரபலமடைந்தார்.

தெலுங்கு சினிமாவில் ‘டார்லிங்’ என்று அழைக்கப்படும் பிரபாஸிற்கு, இந்த படத்தின் மூலமாக பெண் ரசிகைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ஜேர்மனியை சேர்ந்த பெண் ஒருவர், பிரபாஸின் படத்தின் தனது முதுகில் பச்சைக் குத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

மேலும், இது பிரபாஸுக்கு அர்பணிக்கப்பட்டது எனவும் அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...