100க்கும் மேற்பட்டோரை படுகொலை செய்ததாக முன்னாள் பாதுகாவலர்கள் மீது குற்றச்சாட்டு

Report Print Gokulan Gokulan in ஜேர்மனி

நாஜிக்கள் சித்ரவதை முகாமில் 100க்கும் மேற்பட்டோரை கொன்று குவித்த முன்னாள் பாதுகாவலர்கள் இரண்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் ஹிட்லர் தலைமையிலான நாஜி கட்சி ஆட்சி காலத்தில் பல்வேறு கொடூர தண்டனைகள் வழங்கப்பட்டு வந்தன.

அரசுக்கு எதிரானவர்களை சித்ரவதை செய்து கொல்வதற்காக 1939ம் ஆண்டு ஜேர்மனிக்கு வெளியே Stutthof பகுதியில் சித்ரவதை முகாம் அமைக்கப்பட்டது.

இந்த முகாமில் சுமார் 65,000 பேர் படுகொலை செய்யப்பட்டனர், 1945ல் விடுதலை பெற்ற பிறகு Stutthof போலந்து நாட்டின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.

இந்நிலையில் 70 ஆண்டுகள் கழித்து நாஜிக்கள் ஆட்சியில் படுகொலைகள் நிகழ்த்திய மூத்த அதிகாரிகள் மீதான விசாரணையை அந்நாட்டு நீதிமன்றம் நடத்தி வருகிறது.

தற்போது Stutthof சித்ரவதை முகாமில் 100க்கும் மேற்பட்டோரை கொலை செய்ததாக முன்னாள் பாதுகாவலர்கள் இருவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது, அவர்கள் பெயர் வெளியிடப்படவில்லை, இவர்கள் 90 வயதிற்கு மேற்பட்டவர்கள்.

92 வயதுடைய ஒருவர் ஜீன் 1944 முதல் 1945 மே மாதம் வரையிலும், 93 வயதுடைய மற்றொருவர் ஜீன் 1942 முதல் செப்டம்பர் 1944ம் ஆண்டு வரையிலும் சித்ரவதை முகாமில் பாதுகாவலர்களாக பணியாற்றியிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவர்கள் 1944ம் ஆண்டு சித்ரவதை முகாமில் போலந்து கைதிகளை மொத்தமாக கொன்று குவித்ததாகவும், அதே ஆண்டு காயமடைந்த 77 சோவியத் கைதிகளை சித்ரவதை செய்து கொன்றதாகவும் அரசு தரப்பு வக்கீல் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

மேலும் 1944ல் நூற்றுக்கும் மேற்பட்ட ஜீவிஸ் இனத்தவர்களை அழித்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இத்தகவலை ஜேர்மனியின் Muenster நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இரு முன்னாள் காவலர்களும் தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளனர், இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடத்தப்படவுள்ளது.

நாஜிக்கள் மீது பல்வேறு வழக்கம் தொடரப்பட்டாலும் அவர்கள் வயதை காரணம் காட்டி பெரும்பாலான வழக்குகள் விசாரணை முடியாமலேயே கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers