ஜேர்மனியில் இறப்பை விட அதிகரித்த பிறப்பு சதவீதம்: காரணம் இதுதான்

Report Print Raju Raju in ஜேர்மனி

ஜேர்மனியில் கடந்த 2015-ஐ விட 2016-ல் பிறப்பு சதவீதம் 7.4 அதிகரித்துள்ளதும், இறப்பு சதவீதம் 1.5 குறைந்துள்ளதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

பெடரல் புள்ளிவிவர முகமை இதுகுறித்த ஆய்வை நடத்தி முடிவை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2016-ல் 792,000 குழந்தைகள் பிறந்துள்ளது, இது 2015-ஐ விட 7.4 சதவீதம் அதிகமாகும்.

அதே போல 2016-ல் 911,000 பேர் இறந்துள்ளனர், இது 2015-ஐ விட 1.5 சதவீதம் குறைவாகும்.

பிறப்புகளில் அதிகரிப்பு மற்றும் இறப்புகளில் குறைதல் ஆகியவற்றின் காரணமாக நாட்டில் மக்கள்தொகை மாற்றம் நிகழ்ந்துவிட்டதாக அர்த்தமில்லை என ஆய்வில் ஈடுபட்ட ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

மக்கள்தொகையின் வயது வித்தியாச அடிப்படையில் பலவீனமான தசாப்தங்கள் உள்ளன எனவும் தெரிவித்துள்ளனர்.

ஜேர்மனி குடிமகன்கள் மற்றும் வேறு நாட்டிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் என இருவகையினருமே கடந்த வருட பிறப்பு விகிதம் அதிகரிக்க காரணமாக இருந்துள்ளனர்.

அதிலும் முக்கியமாக ஜேர்மனியின் வாழும் 26லிருந்து 35 வயது வரையிலான பெண்கள் தான் அதிக குழந்தை பெற்றெடுக்கிறார்கள்.

கடந்த 2008-லிருந்து இந்த வயது கொண்ட பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, ஆனால் 2020-ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்த வயதில் உள்ள பெண்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக குழந்தைகள் பிறப்பு விகிதமும் தானாக குறையும் என நம்பப்படுகிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers