ஜேர்மனியில் மலர்ந்த காதல்: தமிழக இளைஞரை கோவில்பட்டியில் கரம் பிடித்த பெண்

Report Print Santhan in ஜேர்மனி

தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர், ஜேர்மனி பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் அக்கிராம மக்களிடையே ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வைரமயில் என்பவர், ஜேர்மனியில் இருக்கும் நிறுவனம் ஒன்றில் அலுவலராக பணியாற்றி வருகிறார். இவருடன் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த பீட்ரிச் என்ற பெண்ணும் பணியாற்றியுள்ளார்.

பணியின் போது வைரமயில் மற்றும் பீட்ரிச்சுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. முதலில் நண்பர்களாக பழகிய இவர்கள், அதன் பின் காதலித்துள்ளனர்.

இது குறித்து இருவரும் தங்கள் பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் அதன் பின் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து இவர்களின் திருமணம் வைரமயிலின் சொந்த ஊரான கோவில்பட்டியில் நடத்த திட்டமிட்டிருந்தது. அதன் படி இவர்கள் திருமணம் இன்று தமிழ் கலாசார முறைப்படி நடைபெற்றது.

இந்த திருமணத்தில் மணப்பெண் பீட்ரிச்சும், மணமகளின் பெற்றோர் மற்றும் உறவினர்களும் தமிழக கலாசார முறைப்படி பட்டுச்சேலை, பட்டு வேட்டி சட்டை அணிந்திருந்தனர். விழாவிற்கு வந்த கிராம மக்கள் அவர்களை ஆச்சரியமாகப் பார்த்து சென்றனர்.

இது குறித்து பீட்ரிச் கூறுகையில், தமிழ் கலாசாரம் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் தமிழ் கலாசாரத்தால் மிகவும் ஈர்க்கப்பட்டதாகவும், தயவு செய்து நாம் அதை போற்றி பாதுகாக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இத்திருமணத்தில் திரைப்பட இயக்குனர் மு.களஞ்சியம் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்