ஐரோப்பிய நகரங்களிலேயே ஜேர்மன் நகருக்கு கிடைத்த புகழாரம்

Report Print Kabilan in ஜேர்மனி

ஜேர்மனியின் Görlitz நகரம் ஐரோப்பிய கண்டத்திலேயே சிறந்த படப்பிடிப்பு தள நகரமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற தொடரான ‘Game of Thrones'ன் படப்பிடிப்புகளை நடத்துவதில் சிறந்த இடமாக ஜேர்மனியின் Görlitz நகரம், ஐரோப்பிய திரைப்பட ஆணைக்குழு அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

பல பில்லியன் டொலர் செலவில் தயாரிக்கப்படும் ‘Game of Thrones' தொடருக்கான படப்பிடிப்பு தள போட்டியில், குரோஷியா, ஸ்பெயின் நகரங்களை பின்னுக்கு தள்ளி Görlitz முதலிடம் பிடித்துள்ளது.

56,000 மக்கள் வசிக்கும் இந்நகரில் 3,500 வரலாற்றுச் சின்னங்கள் உள்ளன.

இதற்கு முன்பும், இந்த நகரத்தில் பல சர்வதேச புகழ்பெற்ற திரைப்படங்களும் எடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, 'The Book Thief', 'Inglorious Basterds', 'Around the World in 80 Days', 'The Monuments Men' and 'The Reader' ஆகிய திரைப்படங்கள் அவற்றில் அடங்கும்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்