கொத்து கொத்தாக சாலையில் இறந்து கிடந்த பறவைகள்: அதிர்ந்த மக்கள்

Report Print Raju Raju in ஜேர்மனி
358Shares

ஜேர்மனி சாலையில் 46 பறவைகள் ரத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்த நிலையில் பொதுமக்கள் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்தனர்.

மத்திய ஜேர்மனியின் Bad Wildungen நகரின் முக்கிய சாலையில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.

மொத்தம் 46 பறவைகள் ரத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்தன. இது அந்த பகுதி மக்களை குழப்பமடைய செய்த நிலையில், அங்கிருந்தவர்கள் இதை புகைப்படமாக எடுத்து சமூகவலைதளத்தில் வெளியிட்டதில் அது வைரலானது.

பறவைகள் எப்படி உயிரிழந்தது என ஆரம்பத்தில் யாரும் கூறாமல் இருந்த நிலையில், மர்மமான விலங்கினங்கள் திடீரென்று வானத்திலிருந்து விழுந்து விட்டது என்ற வதந்தி வேகமாக பரவ தொடங்கியது.

சமூகவலைதளங்களிலும் பறவைகள் இறந்தது குறித்து விவாதங்கள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், சாலையில் சென்ற லொறி மோதியதால் தான் பறவைகள் உயிரிழந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்த நபர் கூறியுள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்