ஜேர்மனியில் பல்பொருள் அங்காடி முன் சுடப்பட்ட இளைஞர்: தப்பிய குற்றவாளி

Report Print Kabilan in ஜேர்மனி

ஜேர்மனியில் 25 வயது இளைஞர் ஒருவர் பல்பொருள் அங்காடியின் முன்பு துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bremen நகரில் உள்ள REWE எனும் பல்பொருள் அங்காடிக்கு நேற்று இளைஞர்கள் இருவர் வந்துள்ளனர், அப்போது இருவருக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது.

அதில், ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியினால் இன்னொருவரை பலமுறை சுட்டுள்ளார். இதனால் படுகாயமடைந்த குறித்த இளைஞர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் நடந்த போது அங்காடிக்குள் இருந்த குடும்பத்தினர் கதறி அழுதுள்ளனர்.

இக்கொலைக்கான காரணம் குறித்து தெளிவான தகவல் இல்லை, எனினும் தப்பிச் சென்ற குற்றவாளியால் பொதுமக்களுக்கு எதுவும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...