ஜேர்மனியில் 27 வருடங்களில் இல்லாத அளவு குறைந்த வேலையில்லா திண்டாட்டம்

Report Print Raju Raju in ஜேர்மனி

ஜேர்மனியில் கடந்த 27 வருடங்களில் இல்லாத அளவு வேலையின்மை பிரச்சனை அதிகளவு குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.

ஜேர்மனியின் மத்திய தொழிலாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜேர்மனியில் கடந்த அக்டோபர் மாதத்தில் மொத்தம் 2.389 மில்லியன் ஜேர்மனியார்கள் வேலையில்லாமல் இருந்துள்ளனர்.

இது கடந்த 1990-ஆம் ஆண்டுக்கு பின்னர் மிக குறைவாகும் என கூறப்பட்டுள்ளது, 2017 செப்டம்பர் மாதத்தை ஒப்பிடும் போது அக்டோபரில் வேலையின்மை எண்ணிக்கை 60,000-மாக குறைந்துள்ளது.

வருட அடிப்படையில் பார்த்தால் 2016 அக்டோபரிலிருந்து இந்த வருட அக்டோபர் வரை எண்ணிக்கையானது 151,000-ஆக குறைந்துள்ளது.

அதாவது சதவீத அடிப்படையில் 5.4 ஆக இருந்த நிலையில் அதில் 0.1 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது.

ஜேர்மனியின் தொழிலாளர் சந்தை வளர்ச்சியடைவதே, வேலையின்மை பிரச்சனை குறைந்து வருவதற்கு ஒரு சான்று என மத்திய தொழிலாளர் அலுவலக இயக்குனர் டெட்லிப் ஷீலே கூறியுள்ளார்.

2017-ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் ஜேர்மனி மற்றும் ஐரோப்பிய மண்டலங்களில் பொருளாதார வளர்ச்சி அதிகரித்திருப்பதும் வேலையின்மை வீழ்ச்சியடைந்ததற்கு காரணம் என என நம்பப்படுகிறது.

அதே நேரத்தில் வேலையின்மை பிரச்சனை 2018-ல் அதிகரிக்கும் எனவும், ஜேர்மனியில் குவியும் அகதிகள், வேலையில்லாத திண்டாட்டத்தால் பாதிக்கப்படும் கணக்கும் ஜேர்மனிக்கு தான் சேரும் எனவும் பொருளாதார நிபுணர் ஸ்டீபன் கிபர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...