பிபிசி ஊடகத்திற்கு கடிதம் எழுதிய மாணவரை கைது செய்த ஜேர்மன் பொலிசார்

Report Print Arbin Arbin in ஜேர்மனி
409Shares

ஜேர்மனியின் Greifswald பகுதியில் குடியிருந்து வந்த பாடசாலை மாணவர் ஒருவர் பிபிசி ஊடகத்திற்கு கடிதம் எழுதிய குற்றத்திற்காக பொலிசாரால் கைதாகினார்.

ஜேர்மனியின் Greifswald பகுதியில் குடியிருந்து வந்தார் பாடசாலை மாணவரான Karl-Heinz Borchardt. இவர் தொடர்ந்து வானொலி நிகழ்ச்சிகளை கேட்டு வருபவர்.

இந்த நிலையில் குறித்த வானொலியில் வாசகர் கடிதம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் Borchardt கடிதம் எழுதி வந்துள்ளார். ஆளும் அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து கடிதங்களை எழுதி வந்த மாணவர் Borchardt இதனால் கடும் சிக்கலில் சிக்கினார்.

1968 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனது முதல் கடிதத்தை பிபிசி வானொலிக்கு அவர் எழுதியுள்ளார். குறித்த நிகழ்ச்சியில் வாசகரின் பெயர் மற்றும் முகவரி எதுவும் குறிப்பிடத் தேவையில்லை என்பதால் பெரும்பாலான கடிதங்கள் ஹிட்லர் அரசின் அடக்குமுறைக்கு எதிரான கொந்தளிப்புகளை தாங்கி வந்துள்ளது.

கம்யூனிஸ்ட் கிழக்கு ஜேர்மனியில் வெளிநாட்டு வானொலி நிகழ்ச்சிகளை கேட்பது குற்றமாக கருதப்பட்டது. இருப்பினும் பெரும்பாலான இளைஞர்கள் வானொலி நிகழ்ச்சிகளை கேட்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில் Borchardt குறித்த போதிய ஆதாரங்களை திரட்டிய பின்னர் குடியிருப்புக்கு வந்த உளவுத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து Rostock பகுதியில் அமைந்துள்ள மாநில பாதுகாப்புத்துறை சிறையில் கொண்டு செல்லப்பட்டு, கடுமையான சோதனைக்கு பின்னர் தனிமைச்சிறையில் தள்ளப்பட்டார்.

நீண்ட 8 மாத விசாரணைக்கு பின்னர் எதிரிகளின் வானொலி நிகழ்ச்சிகளை கேட்டு வந்த குற்றத்திற்காக 2 ஆண்டுகள் தண்டனை பெற்றார். தண்டனை காலம் முடிவுக்கு வரும் நிலையில் சர்வதேச பொதுமன்னிப்பு சபையின் தலையீட்டின் பேரில் வடக்கு ஜேர்மனி அரசு Borchardt விடுதலைக்காக முயற்சி மேற்கொண்டது. ஆனால் அதை ஏற்க மறுத்தார் Borchardt.

இறுதியாக தண்டனை காலம் முடிவுக்கு வந்த பின்னரே Borchardt விடுதலை பெற்று வெளியே வந்தார். இதனிடையே 1974 ஆம் ஆண்டு பிபிசி வானொலி குறித்த வாசகர் கடிதம் பகுதியை நிறுத்துவதாக அறிவித்தது.

தண்டனை காலம் முடிவுக்கு வந்து வெளியேறிய Borchardt 15 ஆண்டுகள் பொறியாளராக பணியாற்றினார். பின்னர் கிழக்கு ஜேர்மனியின் இலக்கியம் குறித்து படித்து தேர்ந்தார்.

தற்போதும் அவர் ஜேர்மன் இலக்கியம் குறித்து அங்குள்ள மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்