ஜேர்மனியில் துப்பாக்கி சூட்டில் முடிந்த வாக்குவாதம்: ஒருவர் பலி- 3 பேர் காயம்

Report Print Arbin Arbin in ஜேர்மனி

ஜேர்மனி தலைநகர் பெர்லினில் மது அருந்திவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சி ஆதரவாளர்கள் திடீரென துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பெர்லினில் உள்ள Cozy Club மதுபான விடுதியில் குறித்த சம்பவம் நிழ்ந்துள்ளது.

உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 2.15 மணியளவில் பொலிசருக்கு தகவல் ஒன்றுவந்துள்ளது. தகவலறிந்து விரைந்த சென்ற பொலிசார், குறித்த மதுபான விடுதி முன்று ரத்த வெள்ளத்தில் மூவர் குற்றுயிராய் கிடப்பதை கண்டனர்.

உடனடியாக அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய பொலிசார், இறந்தவரை ,உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மது அருந்திவிட்டு சிலர் அந்த விடுதியில் இருந்து அரசியல் விவகாரம் குறித்து விவாதித்துள்ளனர். இதில் பல கட்சியின் ஆதரவாளர்கள் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே விவாதம் சூடுபிடிக்கவே அரசியல் கட்சி ஆதரவாளர்கள் இடையே கைகலப்பு நடந்துள்ளது.

இதில் ஆத்திரமடைந்த நபர் ஒருவர் தம்மிடம் இருந்த துப்பாக்கியால் விவாதத்தில் ஈடுபட்ட எதிர்கட்சி உறுப்பினர்களை நோக்கி சுட்டுள்ளார்.

இதில் ஒருவர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளார், 3 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

துப்பாக்கி சூடு நடத்திய நபரை பொலிசார் தேடி வருகின்றனர், மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...