ஜி20 மாநாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்: டிரம்பின் அருகே வந்து நின்று கொண்ட பிரான்ஸ் ஜனாதிபதி

Report Print Santhan in ஜேர்மனி

ஜேர்மனியில் நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டின் போது, பங்குபெற்ற தலைவர்கள் அனைவரும் புகைப்படம் எடுக்க தயாரான சமயத்தில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

ஜேர்மனியின் Hamburg நகரில் ஜி20 மாநாடு நேற்றும், இன்றும் நடைபெற்றது. இதில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் மற்றும் பிரித்தானிய பிரதமர் தெரசா மே உள்ளிட்ட தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் பயங்கரவாதம், வர்த்தகம், பருவநிலை மாற்றம் ஆகியன குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

ஜி20 மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து முதலாளித்துவ கொள்கை எதிர்ப்பாளர்கள் லட்சக்கணக்கானோர் கருப்பு உடையணிந்து போராட்டம் நடத்தினர், அதன் பின் இது வன்முறையாக மாறியது.

இதில் 200-க்கும் மேற்பட்ட பொலிசார் கயமடைந்தனர். இந்நிலையில் ஜி20 மாநாட்டின் போது பங்குபெற்ற உலகத் தலைவர்கள் அனைவரும் புகைப்படம் எடுப்பதற்காக தயாராகிக் கொண்டிருந்தனர்.

அந்த சமயத்தில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான், தான் நின்று கொண்ட இடத்திலிருந்து, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இருக்கும் இடத்தை நோக்கி வந்தார். அதன் பின் அவர் அருகே நின்றே புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. புகைப்படம் எடுத்த பின்பும் இருவரும் பேசிக் கொண்டு சென்றனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments