இணையத்தை கலக்கிய பிரான்ஸ் ஜனாதிபதி, கனடிய பிரதமரின் சந்திப்பு

Report Print Raju Raju in ஜேர்மனி

ஜேர்மனியில் நடைபெற்று வரும் G20 மாநாட்டில் பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரானும், கனடிய பிரதமர் ட்ரூடோவும் சந்தித்து கொண்ட புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஜேர்மனியின் Hamburgல் G20 மாநாடு நடைப்பெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் மற்றும் கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் இதில் கலந்து கொண்டார்கள்.

இரு தலைவர்களும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்ட போது கட்டி தழுவி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

இந்த மாநாட்டில் டிரம்ப், நரேந்திர மோடி என பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டாலும், இணையத்தில் மேக்ரான் மற்றும் ட்ரூடோவும் தான் அதிக வைரலானார்கள்.

இது குறித்த செய்தியையும், புகைப்படத்தையும் மேக்ரான் மற்றும் ட்ரூடோ தங்களின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்கள்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments